தூத்துக்குடியில் கார் மோதி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருந்தார்.
தூத்துக்குடியில் கார் மோதி பெண் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி மருதக்கனி (வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் கால்நடைகளுக்கு சோழபுரம அருகே தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி மையத்தடுப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்த மருதக்கனி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ரமேஷ்குமார்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com