மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பலி

மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பலி
Published on

திண்டிவனம், 

மேல்மலையனூர் அருகே செல்லபிராட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி தாட்சாயிணி (வயது 46). இவர் இன்று காலை வயலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த கார் தாட்சாயிணி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com