கார் மோதி பெண் பலி

கலசபாக்கம் அருகே கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மோதி பெண் பலி
Published on

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த வடபுதியூர் குளத்துமேட்டு தெரு சேர்ந்தவர் அருள். இவரது மகள் செலின் (வயது 35). இவர், நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரும், அவருடன் பணிபுரியும் காரியந்தல் பகுதியை சேர்ந்த நிஷா (23) என்பவரும் சைக்கிளை தள்ளிக்கொண்டு காரியந்தல் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென நடந்து சென்ற அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிஷா சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com