கார் மோதி பெண் பலி

கொடைரோடு அருகே கார் மோதி பெண் பலியானார்.
கார் மோதி பெண் பலி
Published on

கொடைரோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. அவருடைய மனைவி லட்சுமி (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று இவர், கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி பிரிவில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு கார், லட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லட்சுமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com