வாகனம் மோதி பெண் பலி

வாகனம் மோதி பெண் இறந்தார்.
வாகனம் மோதி பெண் பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 65). தற்போது இவர்கள் நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தாழையூத்து ராஜவல்லிபுரம் அருகே சாலையில் பிச்சம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com