நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ரவுடி கைது

நெல்லையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை விரைந்து செயல்பட்டு பிடித்த போலீசாரை, கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் அழைத்து சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை விரைந்து செயல்பட்டு பிடித்த போலீசாரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Published on: 

திருநெல்வேலி,

நெல்லை மாநகரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ரவுடி கைது

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான (ரவுடி) பாலபிரசாத் (வயது 30) என்பவர், திருநெல்வேலி மாநகரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை பிடித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த நபர் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி மாநகர ஏட்டு ராதிகா, தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் (ராஜபாளையம் 11வது அணி) சேர்ந்த முதல் நிலை காவலர் பாலமுருகன், காவலர்கள் அஜய், முரளி, முத்து, பழனிராஜ், மாதவன் ஆகியோரை திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com