உலகப் பத்திரிகை சுதந்திர நாள்: துணிச்சல்மிகு பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகப் பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகப் பத்திரிகை சுதந்திர நாள்: துணிச்சல்மிகு பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

இன்று உலகப் பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com