போலீஸ் இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதி வாக்குச்சாவடி மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வாலிபர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் வாலிபர்கள் சிலர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கீதா மங்கேசை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அங்கே விரைந்து சென்றார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செல்வேஷ் (வயது 30), போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com