சென்னையில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை உள்ள பறக்கும் ரெயில் வழித்தடத்தில் பெருங்குடி, வேளச்சேரியில் தொடர்ச்சியாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
சென்னையில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
Published on

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பெருங்குடி மற்றும் வேளச்சேரியில் தொடர்ச்சியாக பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனையடுத்து ரெயில்வே தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தஞ்சாவூரை சேர்ந்த விஜயராகவன் (வயது 26) என்ற வாலிபரை பெருங்குடியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com