சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. சென்னையில் தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,657 பேர்

அண்ணா நகர் - 2,511 பேர்

தேனாம்பேட்டை-2,118 பேர்

ராயபுரம் மண்டலத்தில் - 1,741 பேர்

தண்டையார்பேட்டை-1,628 பேர்

திரு.வி.க. நகர்- 1,778 பேர்

அம்பத்தூரில் 1,306 பேர்

வளசரவாக்கத்தில் 1,049 பேர்

அடையாறு 1,412 பேர்

திருவொற்றியூரில்-979 பேர்

ஆலந்தூர் - 799 பேர்

பெருங்குடி - 798 பேர்

மாதவரம்-778 பேர்

சோழிங்கநல்லூர்-463 பேர்

மணலியில் 463 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com