

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான அண்ணாமலையார் கோவில் உள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.
இதனிடையே, அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலில் சமீப நாட்களாக செங்கற்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் செங்கற்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். சொந்த வீடு கட்ட வேண்டி செங்கல் அடுக்கி வைத்து ஆந்திர பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆந்திர பக்தர்களின் இந்த செயலால் அதிர்சியடைந்த அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செங்கற்களை அகற்றி வருகின்றனர்.