தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை: பரிசோதனைக்கு பின் டுவிட்டரில் தகவல்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனைக்கு பின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி யாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்து.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,நான் இன்று (நேற்று) கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்களும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீக்கிரமாக பரிசோதிப்பது நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் காக்கும். தயக்கம் வேண்டாம். நீங்கள் பரிசோதனை செய்து கொண்டு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com