தென்னாப்பிரிக்காவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு
Published on

கேப் டவுன்,

தென்னாப்பிரிக்காவில் குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பெந்தகொஸ்தே தேவாலயதில் புனித வெள்ளிக்காக இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

அந்த இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த தேவாலயம் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த நிலையில், தற்போது அங்கு பெய்து வரும் மழையால் சுவர்கள் பலவீனமடைந்து இருந்தாகவும், தொடர் மழையால் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com