புதுடெல்லி,
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிபதிகள் குழு முன் நேற்று 3வது முறையாக அந்த பெண் ஆஜரானார்.
இந்த நிலையில் இனிமேல் இந்த விசாரணைக்காக ஆஜராக மாட்டேன் என அவர் அறிவித்து உள்ளார். பல்வேறு காரணங்களால் இனிமேல் இந்த விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.