

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;
ஈரோடு - 38.6
கரூர் பரமத்தி - 38.5
மதுரை நகரம் - 40.4
மதுரை விமான நிலையம் - 41.0
நாகப்பட்டினம் - 38.7
பாளையங்கோட்டை 39
தஞ்சாவூர் - 38
திருச்சி - 39.5
திருத்தணி - 38.1
வேலூர் - 38.1