தமிழகத்தில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்!
Published on

சென்னை,

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 12 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;

  1. சென்னை நுங்கம்பாக்கம் - 38.3°C = 100.9°F

  2. சென்னை மீனம்பாக்கம் - 38.0°C = 100.4°F

  3. கடலூர் - 38.3°C = 100.9°F

  4. ஈரோடு - 38.6°C = 101.5°F

  5. மதுரை - 40.4°C = 104.7°F

  6. மதுரை விமான நிலையம் - 41.1°C = 106.0°F

  7. நாகப்பட்டினம் - 39.0°C = 102.2°F

  8. பாளையங்கோட்டை - 38.9°C = 102.0°F

  9. பரங்கிப்பேட்டை - 38.8°C = 101.8°F

  10. தஞ்சாவூர் - 38.0°C = 100.4°F

  11. திருச்சி - 39.1°C = 102.4°F

  12. திருத்தணி - 38.0°C = 100.4°F

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com