2 மணி நேரத்தில் 123 பதிவுகள்: டுவிட்டரில் சாதனை படைத்த டிரம்ப்

2 மணி நேரத்தில் 123 பதிவுகள் வெளியிட்டு டிரம்ப், டுவிட்டரில் சாதனை படைத்தார்.
2 மணி நேரத்தில் 123 பதிவுகள்: டுவிட்டரில் சாதனை படைத்த டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

சமூக வலைத்தளமான டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் உலக தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கியமானவர். தனது அரசின் புதிய திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் முக்கிய முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார்.

இந்த நிலையில் 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டிரம்ப், டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் டிரம்ப் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

ஒரு பதிவில் அவர், தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்று ஜனநாயக கட்சியினரை சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com