

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 40-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 04, 11.46 p.m
உக்ரைனுக்கு கடந்த வாரம் 1 பில்லியன் டாலர் அளவில் புதிய நிதியுதவியை வெளிநாட்டு ஆதரவு நாடுகள் தர ஒப்புக்கொண்டதாக உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 04, 11.22 p.m
உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை ஜெர்மனி வெளியேற்ற உள்ளது.
ஏப்ரல் 04, 10.51 p.m
ரஷியா மீது புதிய தடைகள் தேவை என்றும், உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுடன், பல நாடுகளின் ஆதரவும் வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 04, 10.16 p.m
உக்ரைனில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டிரஸ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 04 9.30 PM
போரில் ரஷிய ராணுவம் சந்தித்துள்ள இழப்புகள் - உக்ரைன் வெளியிட்ட தகவல்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவம் சந்தித்துள்ள இழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதலில் ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 18,300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
147 விமானங்கள், 134 ஹெலிகாப்டர்கள், 647 டாங்கிகள், 7 படகுகள், 1,273 நான்கு சக்கர வாகனங்கள், 76 எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், 1,844 ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், 4 மொபைல் ராக்கெட் லாஞ்சிங் மெஷின், 92 ட்ரோன்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 04 7.30 PM
புதினால் உக்ரைனை கைப்பற்ற முடியாது - இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் பேரீஸ் வெளியிட்டுள்ள வீடியேவில்;
உக்ரைன் மக்களின் எழுச்சியை புதின் தடுக்க முடியாது. அது பேல் அவரால் உக்ரைனை கைப்பற்றவும் முடியாது. நாங்களும் ஆயுதம் உள்ளிட்ட எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளேம். உக்ரைன் மக்கள் மீண்டு வருவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 04 5.30 PM
ரஷிய படைகளால் உக்ரைன் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை அல்பேனியா மற்றும் கொசோவோ நாட்டின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த கொடூர கொலைகளுக்கு ரஷியாவை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளை அவர்கள் வலியுறுத்தினர்.
ஏப்ரல் 04 4.30 PM
சுமார் 25 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றதாக தகவல்
உக்ரைன் மீதான ரஷிய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 24,81,000 பேர் உக்ரைனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 22,300 பேர் கடந்துள்ளனர், இது சனிக்கிழமை அன்று கடந்த மக்களின் எண்ணிக்கையை விட 6% குறைந்தது, என போலந்து எல்லைக் காவல்படை டுவிட்டரில் தெரிவித்திருந்தது, மேலும் இது மார்ச் 6 இல் இருந்த 1,42,300 என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைந்தது.
போர் தொடங்குவதற்கு முன்பு போலந்திற்கு செல்ல எல்லையைக் கடப்பவர்களின் தினசரி சராசரி எண்ணிக்கை 16,800 ஆக இருந்த நிலையில், தற்போது உக்ரைனுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து, போலந்து வழியாக 4,57,000 பேர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும், போலந்தில் இருந்து யுக்ரேனுக்குள் 15,000 பேர் சென்றுள்ளனர், இது சனிக்கிழமை 21,000 ஆக இருந்தது.
ஏப்ரல் 04 3.30 PM
உக்ரைனில் கொடுங்குற்றம் புரிந்தவர்கள் சிறப்பு மரண தண்டனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுவர் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தமது தாய்நாடு மீதான ரஷிய படையெடுப்பை "முழு நாட்டையும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் செயல்" என்று அழைத்துள்ளார்.
இது தொடர்பாக மொழிபெயர்ப்பாளர் மூலம் சிபிஎஸ் செய்தியிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனியர்கள் ரஷியாவிடம் அடிபணிய விரும்பவில்லை. அதன் விளைவாக அவர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ரஷியாவின் நடவடிக்கைகள் இனப்படுகொலையா என்று நேரடியாகக் கேட்டதற்கு, "உண்மையில், இது இனப்படுகொலைதான். முழு தேசத்தையும் மக்களையும் அழிக்கும் செயல். நாங்கள் உக்ரைனியர்கள். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன. எனவே இது அனைத்து தேசிய இனங்களை அழிக்கும் செயல்" என்று பதிலளித்தார் ஜெலென்ஸ்கி.
ஏப்ரல் 04 3.00 PM
ஏப்ரல் 04 1.55 PM
உக்ரைனில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு போலாந்து அழைப்பு
ஏப்ரல் 04 12.20 pm
ரஷிய ராணுவ வீரர்களை கொலைகாரர்கள், கொடூரர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள், கொள்ளையர்கள் தங்களை ராணுவம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டப்பின்னர் இவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கக்கூடியவர்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 04, 06.00 a.m
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு போப் அஞ்சலி
உக்ரைன் போரின் போது கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு போப் பிரான்சிஸ் நேற்று அஞ்சலி செலுத்தினார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது நன்மைக்காக சேவை செய்ததற்காக கடவுள் அவர்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்புகிறேன். உக்ரேனிய தலைநகரான கிவ்வுக்கு பயணம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் விஷயங்கள் மேலே உள்ளவரிடம்தான் இருக்கிறது, அது சாத்தியமா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 04, 05.40 a.m
புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்தார்.
உக்ரைனில் உள்ள புச்சாவில் பொதுமக்களின் கொடூரமான படுகொலைகளுக்கு, ரஷியா பொறுப்புக்கூற வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாகவும், இதற்கு ரஷிய ஆட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்கள்தான் இந்த குற்றங்களின் குற்றவாளிகள். கொடூரமான தாக்குதல்களுக்கான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரூடோ கூறினார்.
ஏப்ரல் 04, 05.05 a.m
'புச்சா விவகாரம்' குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: ரஷியா கோரிக்கை
ஐ.நாவுக்கான ரஷியாவின் முதல் துணைத் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை ரஷியா கோரியுள்ளது. புச்சாவில் உக்ரேனிய தீவிரவாதிகளின் அப்பட்டமான ஆத்திரமூட்டலைக் கருத்தில் கொண்டு, உக்ரேனிய தூண்டுதல்கள் மற்றும் அவர்களின் மேற்கத்திய ஆதரவாளர்கள் மாஸ்கோவால் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று கூறி, ஏப்ரல் 4ஆம் தேதி பிற்பகல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை திட்டமிடுமாறு ரஷியா வலியுறுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 04, 04.16 a.m
தெற்கு உக்ரைனின் பிராந்திய தலைநகரான கெர்சானில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 04, 03.54 a.m
தெற்கு உக்ரைனின் பிராந்திய தலைநகரான ஒடேசாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 04, 03.22 a.m
செர்னிஹிவ் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்களை உக்ரைன் ராணுவம் விடுவித்தது.
கோலிசிவ்கா, யாஹிட்னே மற்றும் இவானிவ்கா ஆகிய கிராமங்கள் ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்டு இப்போது உக்ரைன் ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக "வடக்கு" செயல்பாட்டுக் கட்டளைமையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ளூர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 04, 02.15 a.m
உக்ரைனின் கார்கிவ் மீது ரஷிய தாக்குதல்களில் ஏழு பேர் இறந்தனர், 34 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 3 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணியளவில், கார்கிவின் ஸ்லோபோடா மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷிய படையெடுப்பாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் விளைவாக, சுமார் பத்து வீடுகள் மற்றும் ஒரு டிராலிபஸ் டிப்போ சேதமடைந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, ஏழு பேர் இறந்தனர், 34 மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்தனர்" என்று கார்கிவின் பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் டெலிகிராமில் தெரிவித்தது.
ஏப்ரல் 04, 01.28 a.m
புச்சா மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், சுடப்பட்ட பொதுமக்கள் உட்பட. புச்சாவில் தனது படைகள் பொதுமக்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
ஏப்ரல் 04, 12.46 a.m
ரஷியாவிற்கு எதிராக ஒரு புதிய பொருளாதார தடைகள் இருக்கும், ஆனால் அது போதாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள குற்றங்களில் குற்றவாளிகள் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளரையும் சட்டப்பூர்வ பொறுப்புக்கு கொண்டு வருவதற்காக உக்ரைனில் ஒரு சிறப்பு சட்ட பொறிமுறையை அமைத்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 04, 12.06 a.m
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகையில், நம்மை தற்காத்துக் கொள்ள உலக வல்லரசுகளிடம் ஆயுதங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை, புச்சாவில் நடைபெற்ற கொலைகள், சித்திரவதைகளுக்கு ரஷிய தலைமை தான் பொறுப்பு என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.