நாடு தவறான திசையை நோக்கிச் செல்வதாக நம்பும் 77% பாகிஸ்தானியர்கள் -ஆய்வில் தகவல்

77 சதவீத பாகிஸ்தானியர்கள் நாடு தவறான திசையை நோக்கிச் செல்வதாவும், நிதி நிலைமை பலவீனமாக உள்ளது எனவும் நம்புகிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
நாடு தவறான திசையை நோக்கிச் செல்வதாக நம்பும் 77% பாகிஸ்தானியர்கள் -ஆய்வில் தகவல்
Published on

இஸ்லாமாபாத்

சந்தை ஆராய்ச்சி மற்றும் பொது கருத்து நிபுணத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐ.பி.எஸ்.ஓ.எஸ்ஸின் சமீபத்தியஆய்வின்படி, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு ஐந்து பேரில் நான்கு பேர் நாடு தவறான திசையில் செல்வதாக கருதுகின்றனர் என தெரியவந்து உள்ளது. 2020 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது, நாடு முழுவதிலுமிருந்து 1,000 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு, நான்காவது காலாண்டில், 21 சதவீதம் பேர் நாடு சரியான பாதையில் செல்வதாக நம்பினர், அதே நேரத்தில் 79 சதவீதம் பேர் மாறுபட்ட கருத்தைக் கொண்டு இருந்தனர்.

புதிய ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாகிஸ்தான் சரியான திசையை நோக்கி நகர்கிறது என்று 23 சதவீதம் பேர் மட்டுமே நம்புகிறார்கள். 77 சதவீதம் பேர் வேறுவிதமாக நம்புகிறார்கள்.

36 சதவீத மக்கள் தங்களது தற்போதைய தனிப்பட்ட நிதி நிலைமை பலவீனமாக இருப்பதை ஒப்புக் கொண்டனர், அதே நேரத்தில் 13 சதவீதம் பேர் நிதி நிலைமை வலிமையாக உள்ளது என்றும் 51 சதவீதம் பேர் இது வலுவானதாகவோ பலவீனமாகவோ இல்லை என்றும் பொதுவாக கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மாகாணங்களும் "மோசமான நிதி நிலைமையில்" இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சிந்து மாகாணத்தில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 20 சதவீத மக்கள் வேலையின்மையால் தவிக்கின்றனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சுமார் 18 சதவீதம் பேர் வேலையின்மை, 12 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் மற்றும் 8 சதவீதம் பேர் வறுமை நிலைமையில் உள்ளனர்.

பலூசிஸ்தானில் சுமார் 25 சதவீதம் பேர் வேலையின்மை என்று குற்றம் சாட்டினர், மேலும் 25 சதவீதம் பேர் இது வறுமை என்று மாகாணத்தின் மோசமான நிதி நிலைக்கு பின்னால் இருப்பதாகக் கருதுகின்றனர் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com