மாஸ்கோவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதல் 7 பேர் படுகாயம்

ரஷிய நாட்டில் உலக கால்பந்து போட்டி நடப்பதால் உலகமெங்கும் இருந்து கால்பந்து ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
மாஸ்கோவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதல் 7 பேர் படுகாயம்
Published on

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் செஞ்சதுக்க பகுதியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது ஒரு கார் வேகமாக வந்து, மக்கள் கூட்டத்தில் மோதியது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் கிர்கிஸ்தான் நாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்து இருந்தது தெரிய வந்தது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறும்போது மக்கள் கூட்டத்தில் மோதிய காரை மக்கள் மறித்து, அதை ஓட்டி வந்தவரை வெளியே இழுத்தனர். ஆனால் அவர் ஓடத்தொடங்கினார். இருப்பினும் சிலர் அவரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர் என்றனர்.

இந்த சம்பவத்தின்போது, அவர் மது அருந்தி இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், மக்கள்கூட்டத்தில் மோத வேண்டும் என்ற நோக்கத்தில் மோதவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com