விமான நிலைய ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடி: விமானங்கள் ரத்து


விமான நிலைய ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடி: விமானங்கள் ரத்து
x

உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் யமகதா மாகாணம் ஹிகஷின் நகரில் விமான நிலையம் உள்ளது. உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் கரடி புகுந்தது. ஓடுதளத்தில் கரடி சுற்றித்திரிந்ததால் விமானங்கள் புறப்பட முடியாமலும், தரையிறங்க முடியாமலும் திணறின. இதனால், 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை தற்காலிமகாக நிறுத்தப்பட்டது. பின்னர், விமான நிலையத்திற்கு அருகே இருந்த வனப்பகுதிக்குள் கரடி சென்றது.

1 More update

Next Story