இலங்கை சிறையில் கைதிகளிடையே மோதல் - 2 பேர் உயிரிழப்பு

சிறைகளில் நிலவும் இடநெருக்கடியே மோதல்களுக்கு முக்கியக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இலங்கை சிறையில் கைதிகளிடையே மோதல் - 2 பேர் உயிரிழப்பு
Published on

கொழும்பு,

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள குருவிட்டா சிறையில் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 கைதிகளில் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளிடம் இருந்த போதைப்பொருள் காரணமாக இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் நடந்த 2-வது சிறைச்சாலை மோதல் சம்பவமாகும். கொழும்பு மத்திய சிறையில் நேற்று இரவு இதே போல் சிறிய அளவிலான மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2 சிறைகளிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நெகம்போ சிறையில் ஏற்பட்ட கலவரங்களில் 33 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 1-ந்தேதி மஹாரா சிறையிலும் இதே போன்ற கலவரம் ஏற்பட்டு, அதில் ஒரு கைதி உயிரிழந்தார். இதுபோல் அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு சிறைகளில் நிலவும் இடநெருக்கடியே முக்கியக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com