பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து; 3 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி இரங்கல்களை தெரிவித்து உள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் தென்மேற்கே தர்ரா ஆதம் கேல் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென நேற்று அதில் விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அவசரகால பொறுப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். சுரங்கத்தில் இருந்து 3 பேரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த 4 பேரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஷாங்லா மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி அலி அமீன் கந்தாப்பூர் இரங்கல்களை தெரிவித்து கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com