பாதுகாப்பு ஒப்பந்தம் அமல்: சவுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள்

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் அமல்: சவுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள்
Published on

இஸ்லமாபாத்,

அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் போர் விமானங்களையும் 13,000 வீரர்களையும் அனுப்பியது.

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தனது முதல் இராணுவ நடவடிக்கையாக சவூதி அரேபியாவிற்கு போர் விமானங்களை மற்றும் 13,000 வீரர்களையும் அனுப்பியுள்ளது.

நேற்று சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமான தளத்தில் போர் விமானங்கள் தரையிறங்கின. செப்டம்பர் 2025-ல் கையெழுத்தான ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் நடந்தால், இரு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.

மேலும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ரியாத் சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அங்கு அவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com