படித்ததும் தானாகவே மறையும்... வாட்ஸ் அப்பில் வரும் புதிய வசதி?

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
image credits: AI
image credits: AI
Published on

சென்னை,

வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் அல்லது பெறும் மெசேஜ்கள் படித்தவுடன் தானாகவே மறையும் வகையில் ‘After Reading’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் குரல்/வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக இந்த தளம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை, தனிப்பட்ட மற்றும் குழு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாகவும் இது மாறியுள்ளது.

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் அனுப்பும் அல்லது பெறும் மெசேஜ்கள் படித்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற புதிய அம்சத்தை தற்போது சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை, வாட்ஸ்அப் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியிட்டு வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com