ரஷியா-உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் - டிரம்ப் சொல்கிறார்

டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக ரஷியாவோ, உக்ரைனோ கருத்து எதுவும் வெளியிடவில்லை.
டிரம்ப் சொல்கிறார்|
Published on: 

வாஷிங்டன்,

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்கிறது. இரு தரப்பும் முக்கிய உள்கட்டமைப்புகளை மாறிமாறி தாக்கி வருகின்றன.

இந்த சூழலில் இரு நாடுகளும் எரிசக்தி போர் நிறுத்தம் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து உள்ளார். அதேநேரம் ஒப்பந்த விதிகள் எதையும் அவர் விவரிக்கவில்லை.

முன்னதாக ரஷியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்காக உக்ரைனை கண்டித்திருந்த டிரம்ப், இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறை நிலவுவ தாகவும் சாடியிருந்தார்.

இந்த நிலையில் இரு தரப்பும் எரிபொருள் கட்டமைப்புகளை தாக்காமல் இருக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக ரஷியாவோ, உக்ரைனோ கருத்து எதுவும் வெளியிடவில்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் மவுனம் காத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com