ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி

ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.
ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி
Published on

* காங்கோ நாட்டில் பயணிகளையும், பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த கோர விபத்து, கசாய் மாகாணத்தில் நடந்துள்ளது.

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தேச துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் குளிர்கால விடுமுறை காலமாக முழு அமர்வுக்கு நீதிபதிகள் இல்லை என்ற காரணம் கூறி இந்த மனு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

* சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சர்வதேச சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 79 ஓட்டுகளும், எதிராக 60 ஓட்டுகளும் விழுந்தன.

* ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.

* சிலி நாட்டில் புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றுவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிவதற்காக வரும் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிபர் செபாஸ்டியன் பினேரா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com