பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு, நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு, நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
Published on


* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான விசாரணையை, அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது நினைவுகூரத்தக்கது.

* ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதன் காரணமாக எழுந்துள்ள மாசு, மெல்போர்ன் நகரத்தை உலகின் மிக மோசமான தரம் கொண்ட காற்று வீசும் நகரமாக மாற்றி உள்ளது.

* பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பனிச்சரிவு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

* இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கனடாவிலும், இங்கிலாந்திலும் மாறி மாறி வசிக்க உள்ளனர். கனடாவில் அவர்கள் தங்கி இருக்கும்போது அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செலவை ஏற்பது குறித்து கனடா அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

* மங்கோலியாவில் டெல்கர்முருன் ஆறு உறைந்துவிட்டது. இந்த ஆற்றில் 81 ஆடுகள் விழுந்து பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com