இந்தியாவின் 2-வது கட்ட மருத்துவ உதவி: ஈரான் தூதர் நெகிழ்ச்சியுடன் நன்றி

கடினமான காலங்களில் இந்தியர்கள் ஒரு நம்பகமான மற்றும் இரக்கமுள்ள கூட்டாளிகள் என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2-வது கட்ட மருத்துவ உதவி: ஈரான் தூதர் நெகிழ்ச்சியுடன் நன்றி
Published on

தெஹ்ரான்,

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 27,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போர் தீவிரமடையும் சூழலில் ஈரானில் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஈரான் தூதரகம் இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்ட தன்னார்வ நன்கொடைகளை கொண்டு 40 டன் மருந்துகளை வாங்கியுள்ளது. அந்த மருந்துகள் கடந்த மாதம் 18-ம் தேதி அன்று முதல் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இன்று இந்தியாவில் இருந்து மருந்துகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு ஈரானிய செம்பிறை சங்கத்திற்கு (Red Crescent Society) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலி கூறியதாவது:

ஈரானில் நிலவி வரும் இக்கட்டான சூழலில், இந்திய மக்கள் காட்டிய மனிதாபிமான உதவிக்காக இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கடினமான காலங்களில் இந்தியர்கள் ஒரு நம்பகமான மற்றும் இரக்கமுள்ள கூட்டாளிகள் என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கும் தனது நன்றி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com