விற்பனைக்கு வந்தது மாஸ்கோவின் புகழ்பெற்ற ரிஜ்ஸ்கி ரயில் நிலையம்

புதிய நோக்கங்களுக்காக மாற்றி கொள்ளும் சாத்திய கூறுகளை திறந்துவிடுகிறது, என்று அந்நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
விற்பனைக்கு வந்தது மாஸ்கோவின் புகழ்பெற்ற ரிஜ்ஸ்கி ரயில் நிலையம்
Published on

மாஸ்கோ,

பெருகிவரும் கடன் மற்றும் சரிந்துவரும் லாபங்களுக்கு மத்தியில் தனது நிதிநிலையை வலுப்படுத்தும் முயற்சியாக, ரஷியாவின் அரசுக்குச் சொந்தமான ரயில்வே நிறுவனமான ரஷ்ய ரயில்வேஸ், மாஸ்கோ நகரின் வரலாற்று சிறப்புமிக்க 'ரிஜ்ஸ்கி ரயில் நிலையத்தை' 4 பில்லியன் ரூபிள் (52.5 மில்லியன்) விலைக்கு, அவித்தோ எனும் இணைய சந்தையில் விற்பனைக்கு அறிவித்துள்ளது.

நீண்ட காலமாக நீண்ட தூர பயணிகள் ரயில் சேவைகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த ரயில் நிலைய வளாகத்தை, மறுமேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பாக இந்த விற்பனை அறிவிப்பு முன்வைக்கிறது.

புதிய நோக்கங்களுக்காக மாற்றி கொள்ளும் சாத்திய கூறுகளை திறந்துவிடுகிறது, என்று அந்நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியை முதன்முதலில் ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டிருந்தது.

ரிஷ்ஸ்கி நிலையத்துடன் கூடுதலாக, ரஷிய ரயில்வேஸ் நிறுவனம் மாஸ்கோ நகர வணிக மாவட்டத்தில் உள்ள மாஸ்கோ டவர்ஸ் வானளாவிய கட்டிடத்தை 281 பில்லியன் ரூபிள்கள் (3.7 பில்லியன் டாலர்) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது.

ரிஷ்ஸ்கி நிலையம் 2021 முதல் புறநகர் ரயில்களுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது. பல நீண்ட தூர வழித்தடங்கள் பெலருஸ்கி நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன, அதே நேரத்தில் லாட்வியாவின் தலைநகரான ரிகாவிற்கான சேவைகள் 2020-ல் கோவிட் பெருந்தொற்றின் போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com