யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் சாவு எண்ணிக்கை 200ஐ கடந்தது

யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் சாவு எண்ணிக்கை 200ஐ கடந்தது
Published on

நேபிடோவ்,

தென்சீன கடலில் உருவான யாகி சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால், மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.

இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 226 பேர் பலியாகியுள்ளனர், 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com