

வெலிங்டன்
நியூசிலாந்தில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பொதுத்தேர்தல் நடத்தப் படுவது வழக்கம். அங்கு நிலவி வரும் கடுமையான பொருளாதார மந்தநிலை, வர லாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நலிவடைந்து வரும் சுகாதாரக் கட்டமைப்பு ஆகிய காரணங்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் அடுத்த 3 ஆண்டுகால ஆட்சியைத் தீர்மானிப்பதற்கான பொதுத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற் றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கைப் பதிவுகளை வெளியிட்டது. இதில் 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான 'தேசிய கட்சி' 29.4 சதவீத வாக்குகளையும் மற்றும் எதிர்க்கட்சியான 'தொழிலாளர் கட்சி' 29.2 சதவீத வாக்குகளை பெற்று மிகக் கடுமையான இழுபறியில் உள்ளன.
இதனால் நியூசிலாந்தின் 'கலப்பு விகிதாசார தேர்தல்' முறைப்படி, எந்தவொரு தனி ஒரு கட்சியும் தன்னிச்சையாக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. கூட்டணிகள் அமைப்பது கட்டாயமாகும். இதனால் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையி லான தற்போதைய ஆளும்கட்சி கூட்டணிக்கு கூடுதல் இடங்களுடன் சேர்த்து மொத்தம் 67 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், 5 சதவீதத் தகுதி வரம்பைத் தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழையும் புதிய நடுக்கட்சியான 'ஆப்பர்சூனிட்டி கட்சி' யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய 'கிங்மேக்கர்' சக்தியாக உருவெடுத்துள்ளது. நிதி மந்திரி நிக்கோலா வில் லிஸ் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந் தித்துள்ளனர். வெளிநாடு வாழ் நியூசிலாந்து மக்கள் மற்றும் தங்களின் சொந்தத் தொகுதிக்கு வெளியே இருந்து வாக்களித்தவர்களின் 'சிறப்பு வாக்குகள்' அனைத் தும் முழுமையாக எண்ணப்பட்டு, அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வரும் 27-ந்தேதி வெளியான பிறகே நியூசிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது அதிகாரப்பூர் வமாக இறுதி செய்யப்படும்.