உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்

உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்
Published on

டோக்கியோ,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷிய அதிபர் புதின் கவுரவப்படுத்தினார்.

இது தொடர்பான செய்தி ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது. அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலேயே தடுமாறி அழுதார். பின்னர் நிதானமடைந்த அவர், சிறிது நேரத்திற்கு பின் செய்தி வாசிப்பை தொடர்ந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த செய்தி வாசிப்பாளரைப் போலவே தாங்களும் அழுததாக கருத்து பதிவிட்டுள்ளனர். மக்களின் மனதில் இந்த போர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com