சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு: பேச்சை புறக்கணித்து வெளியேறிய மாணவர்கள்

சுந்தர் பிச்சை பேசத் தொடங்கியபோது, மாணவர்கள் கோஷமிட்டவாறே அரங்கத்தை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன
சுந்தர் பிச்சை
Published on

கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற மேடையேறியபோது, அங்கிருந்த சில பட்டதாரிகள் " ப்ரீ பாலஸ்தீனம்" என முழக்கமிட்டு, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, விசில்களை ஊதியபடி விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சுந்தர் பிச்சை பங்கேற்று உரையாற்றினார். எனினும், கூகுளின் சில ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பாலஸ்தீனத்திற்கு நீதி கோரும் அமைப்புகள் உள்ளிட்ட சில குழுக்களுடன் தொடர்புடைய மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உரையாற்றிய சுந்தர் பிச்சை, தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான விஷயங்களை பேசாமல், மாணவர்களுக்கு வாழ்க்கை சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, சரியான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவர் எடுத்துரைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com