

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசபராபாத் அருகே பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவுக்கு சொந்தமான எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹெலிகாப்டரில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ராணுவம் வெளியிடவில்லை.விபத்து நடந்ததும் மீட்பு மற்றும் உடல் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தன. விபத்துக்கான துல்லியமான தொழில்நுட்ப காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.