பாகிஸ்தான்-ஈரான் மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு: பரஸ்பர நம்பிக்கை குறித்து ஆலோசனை

இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

கடந்த 16-ந் தேதி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈரான் விமானப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக, கடந்த 18-ந் தேதி, ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிர்-அப்துல்லாகியனும் நேற்று தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அப்போது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு உணர்வு அடிப்படையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஈரானுடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஜலில் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரச்சினைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர். அதுபோல், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ தலைவர்கள், உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், ஈரானுடனான மோதல் குறித்து விவாதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com