

ஜெருசலேம்,
இஸ்ரேல் நாடாளுமன்மத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரபுக் கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து தங்கள் வெற்றியைத் திருடிவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வின் லிகுட் குற்றம்சாட்டியுள்ளது.
வாக்காளர்களை மிரட்டுதல், முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குறித்து காவல்துறை மற்றும் உள்நாட்டுப்பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் ஆட்சி விசாரணை நடத்த வேண்டும் என்றும் லிகுட் கட்சி கோரியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் 120 உறுப்பினர்களைக்கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தல் முடிவுக ளுக்குப் பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது.
நேதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 48 இடங்களும் கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அரபு கட்சிகள் இணைந்து 19 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய அரசை அமைப்பதில் அரபுக் கட்சிகள் ஆதரவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்நிலையில், அரபுக் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், வாக்குச் சாவடிகளில் வன்முறையின் ஈடுபடுதல், போலி ஆவ ணங்களைக் காட்டி கள்ள ஒட்டு போடுதல், ஒன்றுக்கு மேற்பட்ட முறை
வாக்களித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சாட்சியங்களையும்,ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. தேர்தலில் முறைகேடு நடந் ததாகக் கூறப்படுவதைத் தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், அனைத்து புகார்களும் ஆய்வுசெய்யப்படும் எனத்தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால், கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை யைத்தவிர்க்க, அரசியல் கட்சிகள்பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தியுள்ளார்.
அரபுக் கட்சிகளுடன் இணைந்து அரசு அமைப்பதை எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட் ஏற்க னவே நிராகரித்துள்ளார். இதனால், அவருக்குப் பெரும் பான்மை ஆதரவைத் திரட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். தற்போது நெதன்யாகு கட்சியும் அரபுக் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளதால் கூட்டணி அமைப்பதில் சிக்கல் உள்ளது.
எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் , சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வாரக்கணக்கிலோ, மாதக்க ணக்கிலோ நீடிக்கலாம். அப்போதும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.