

வாஷிங்டன்,
அமெரிக்க ராணுவ, வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றனர்.
பேச்சுவார்த்தை முடிந்தநிலையில், அவர்கள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினர். வெள்ளை மாளிகையில் நடந்த இச்சந்திப்பு, 30 நிமிட நேரம் நீடித்தது.
பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து டிரம்ப் ஆர்வம் தெரிவித்தார். ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். வர்த்தகம் பற்றியும் சுருக்கமாக பேசினோம் என்றார்.