பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 17 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி
Published on

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என்று ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வி0பத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் ராணுவம் வெளியிடவில்லை. விமானம் விபத்துக்குள்ளான குடியிருப்பு பகுதிகளில் இருந்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com