ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

சீயடா பகுதி ஐரோப்பாவை அடைய புலம் முயற்சிக்கும் பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய மையப்புள்ளியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஸ்பெயின்
Published on

சீயடா,

மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய தரைக்கடல்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மொராக்கோவில் இருந்து ஏராளமான அகதிகள் ஸ்பெயின் நாட்டின் சீயடா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

மொராக்கோவின் மத்திய தரைக்கடல் கடற் கரையில் உள்ள ஸ்பெயினின் ஒரு சிறிய பகுதியான சீயடாவுக்குள் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கானோர் எல்லை கம்பிகளை தாண்டி உள்ளே புகுந்தனர்.

இதில் பலர் கடலில் நீந்தியும், காற்றடைத்த வளையங்கள் மற்றும் மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் சீயடா பகுதியை வந்தடைந்த அகதிகள் எல்லை வேலியிலுள்ள ஒரு கதவு வழியாக நுழைந்து ஓடினர்.

அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது ஏற்பட்ட நெரிசல்-தள்ளு முள்ளுவில் 9 பேர் பலி யானார்கள்.

ராணுவம் குவிப்பு

நிலைமையை சமாளிக்க ராணுவத்தை அனுப்ப உள்ளூர் நிர்வாகம் ஸ்பெயின் அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து சீயடா பகுதியில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கிய மையப்புள்ளி

இதற்கிடையே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் செஸ், உளதுறை மத்திரி பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ் ஆகியோர் இன்று சியூட்டாவிற்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பெயினின் சீயடா பகுதி ஐரோப்பாவை அடைய புலம் முயற்சிக்கும் பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய மையப்புள்ளியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com