

மாட்ரிட்,
ஸ்பெயின் ரெயில் விபத்து தொடர்பாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் மாட்ரிட் - செவில்லே நகரங்களுக்கு இடையே ரெயில் சேவை உள்ளது.
இதனிடையே, இந்த நகரங்களுக்கு இடையே ஒரே தண்டவாளத்தில் நேற்று இரு அதிவிரைவு ரெயில்கள் நேருக்கு நேர் மோதின. டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா பகுதியில் இந்த ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த ரெயில் விபத்தில் பெண்கள் உள்பட 68 பயணிகள் உயிரிஅந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயின் ரெயில் விபத்து தொடர்பாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, விபத்துக்குள்ளான ரெயில்களில் பயணித்த இந்தியர்களின் விவரங்கள் அறிய, தேவையான உதவிகளை பெற, விபத்து தொடர்பான தகவல்களுக்கு இந்தியர்கள் +34 650 339 008, email: cons.madrid@mea.gov.in, Renfe: 900 10 10 20 and Iryo: 900 001 403 என்ற எண்களை தொடர்புகொள்ளுமாறு ஸ்பெயினுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.