ஸ்பெயினில் வாடகை உயர்வை கட்டுப்படுத்தும் அவசர சட்டம்: கூட்டணி கட்சி எதிர்ப்பு

கூட்டணி கட்சி எதிர்ப்பதால், சட்டம் தோல்வி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினில் வாடகை உயர்வை கட்டுப்படுத்தும் அவசர சட்டம்: கூட்டணி கட்சி எதிர்ப்பு
Published on: 

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் நிலவி வரும் கடுமையான வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் அநியாய வாடகை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பிரமாண்ட போராட்டம்

கடந்த வாரம் 87 வயது முதியவர் ஒருவர் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய சதுக்கங்களில் கூடாரங்களை அமைத்துப் பிரமாண்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டம் தோல்வி

மக்களின் இந்த கொந்தளிப்பை அடக்க, பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான கூட்டணி அரசு, வாடகை உயர்வை கட்டுப்படுத்தவும், ஏழைகளை வெளியேற்றுவதைத் தடுக்கவும் புதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஆளும் அரசுக்கு, முக்கிய ஆதரவுக் கட்சியான 'ஜண்ட்ஸ்' கட்சி கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தச் சட்டம் சொத்துரிமையை பாதித்து வாடகை வீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்று கூறி ஜண்ட்ஸ் கட்சி எதிர்ப்பதால், சட்டம் தோல்வி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com