இலங்கை சிறை கலவரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் கலவரம் வெடித்தது.
இலங்கை சிறை கலவரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு
Published on

கொழும்பு.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

சிறையில் இரு குழுக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை உயர்வு

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கியை பயன்படுத்திய சத்தம் சிறைச்சாலையின் வெளியில் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஏற்கனவே 2 காவல் அதிகாரிகள் உள்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com