தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷியா: வெளிநாட்டு பயணங்களை தள்ளிவைத்த உக்ரைன் அதிபர்

ஜெலன்ஸ்கி இந்த வாரம் வெளி நாடுகள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பயணத்தை தள்ளிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளித்து வரும் ராணுவ மற்றும் நிதி உதவி மூலம் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷியா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெலன்ஸ்கி இந்த வாரம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பயணத்தை காலவரையின்றி தள்ளிவைத்துள்ளதாகவும் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கருங்கடல் மற்றும் கிரிமியா தீப கற்ப பகுதிகளை குறிவைத்து உக்ரைன் வீசிய 10-க்கும் மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com