பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வில்லியனூர்

வில்லியனூர் கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். அவரது மனைவி ரோஜா (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com