ஓடிடி தளத்தில் வெளியாகும் அரண்மனை 3

ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் அரண்மனை 3
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டு இருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜீ5 ஓடிடி தளத்தில் மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com