'சிக்கன் 65' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

'சிக்கன் 65' என்ற பெயர் எப்படி வந்தது? என்ற கேள்வி நம் அனைவருக்குமே எழும். அதற்கான விடையை இதில் காண்போம்.
இந்தக் கேள்விக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல அசைவ உணவகம் விளக்கம் தருகிறது.
அந்த உணவகத்தில் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தையொட்டி, பொறித்த சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்று வாடிக்கையாளர்களுக்கு மசாலாவில் ஊறவைத்து பொறித்த சிக்கன் துண்டுகள் பரிமாறப்பட்டுள்ளது.
அதை சுவைத்த வாடிக்கையாளர் ஒருவர், "இதற்கு பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த உணவக முதலாளி, 'சிக்கன் 65' என்று புத்தாண்டை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
அன்று முதல் மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை 'சிக்கன் 65' என்று அழைக்கிறோம்.
Explore