2025ல் ரீ-ரிலீஸில் பட்டையை கிளப்பிய தமிழ் படங்கள்!

படையப்பா: ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
பாட்ஷா: படம் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், ஜூலை 18ம் தேதி, ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
சச்சின்: 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் ஏப்ரல் 18-ந்தேதி திரைக்கு வந்தது. உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடினர்.
குஷி: விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் இந்தாண்டு ரீரிலீஸ் ஆனது. காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ப்ரண்ட்ஸ்; விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21 ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
அட்டகாசம்: நடிகர் அஜித்தின், அட்டகாசம்' திரைப்படம் நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்தது. வசூல் ரீதியாக படையப்பா, சச்சின் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது.
வீரம்: திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு, அஜித்தின் பிறந்த நாள் ஆகிவற்றை முன்னிட்டு மே 1 ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். இந்தாண்டு ரீ-ரிலீஸ் படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களில் இப்படம் 4 ஆம் இடம் பிடித்தது.
அஞ்சான்: சூர்யாவின் நடிப்பில் உருவான அஞ்சான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
கேப்டன் பிரபாகரன்: 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
Explore