பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது. சிலர் இதனை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர். இதனால் பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர். இதனை மாற்றி கொண்டால் பழங்களில் இருந்து ஆரோக்கியமான முறையில் நன்மையினை பெறலாம்.
credit: freepik
பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் அசிடிட்டியை உண்டாக்கும்.
credit: freepik
பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும்.
credit: freepik
பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறையும்.
credit: freepik
உணவு சாப்பிட்ட உடனே பழங்களை உட்கொள்வது தவறான செயலாகும். இது செரிமானத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
credit: freepik
பழங்களை பெரும்பாலும் அப்படியே சாப்பிட முயலுங்கள். அவற்றை ஜூஸ் வடிவிற்கு மாற்றுகையில், ஊட்டச்சத்து இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
credit: freepik
பழங்களின் தோல்களில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். எனவே ஒவ்வொரு பழத்தையும் நன்கு கழுவிவிட்டு தான் உட்கொள்ள வேண்டும்.