மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய ‘பிளாஸ்டிக் டிரம்' மால் பரபரப்பு

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே நேற்று கடலில் இருந்து நீல நிறத்தில் 4 அடி நீளத்தில், 300 கிலோ எடை அளவில் ‘பிளாஸ்டிக் டிரம்' ஒன்று கரை ஒதுங்கியது.
மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய ‘பிளாஸ்டிக் டிரம்' மால் பரபரப்பு
Published on

சென்னை,

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே நேற்று கடலில் இருந்து நீல நிறத்தில் 4 அடி நீளத்தில், 300 கிலோ எடை அளவில் பிளாஸ்டிக் டிரம்' ஒன்று கரை ஒதுங்கியது. அதைபார்த்து மீன்பிடி வலை பின்னும் பணியில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று டிரம்மின் மூடியை திறந்து பார்த்தனர். கப்பலில் இருந்து வெளியேறும் கழிவாக இருக்குமா? அல்லது ரசாயன பொருளாக இருக்குமா? என்ற சந்தேகம் அடைந்து டிரம்மில் இருந்த மாதிரியை எடுத்து சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொக்கிலமேடு கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உருளையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com